மக்களவைத் தேர்தல்


இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்தது வருகிறது.


இந்நிலையில் வரும் 22 -ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்ட்மிட்டிருந்த நிலையில், இன்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 


Tamilisai in BJP: கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்- மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை


யார் இந்த சந்திரகாசன்?


அந்த வகையில் சிதம்பரம் நாடாளுமன்ற தனி  தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக சந்திரகாசனை அறிவித்துள்ளது அதிமுக தலைமை. அரியலூர் மாவட்டம்  செந்துறை தாலுக்கா மணக்குடையான் தாமரைப்பூண்டி  கிராமத்தைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சந்திரகாசன். பெரம்பலூர் மாவட்ட கழக இலக்கிய அணிச் செயலாளராக பொறுப்பு வகிக்கும், 71 வயதான  சந்திரகாசன் என்பவரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  இவர் அதிமுக கட்சியில் 1974 முதல் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.


2003ம் ஆண்டு கிளைக் கழக செயலாளராகவும், 2001 - 2006 -ல் ஒன்றிய கவுன்சிலர், செந்துறை ஒன்றிய குழு பெருந்தலைவராகவும் இருந்துள்ளார்.  தற்பொழுது பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் உள்ளார்.  இவர் வேளாண் துறையில் உதவி வேளாண் அதிகாரியாக அரசு பணியில் இருந்து, பின்னர் அதனை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் முழு நேர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார்.


இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன் அரியலூர் மாவட்ட 1 வது வார்டு கவுன்சிலர் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆவார். கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் சீட்டுகள் கேட்டு கிடைக்காத நிலையில் தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவன் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து சந்திரகாசன் போட்டியிடுகிறார்.


Lok sabha election 2024: மயிலாடுதுறையில் தேர்தலை புறக்கணிக்கும் வாடகை வாகன ஓட்டுநர்கள் - காரணம் என்ன?


தொடங்கிய வேட்புமனுத் தாக்கல்:


தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) இன்று தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.


CM MK Stalin: "மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல" முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!