• Katchatheevu Row:" தேர்தல் நேரம் இல்லை.. எப்போது வேண்டுமானாலும் கச்சத்தீவு பற்றி பேசலாம்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்


இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான விளக்கத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை கொடுத்திருந்தார். மேலும் படிக்க



  • என்னையும் பாஜகவையும் கண்டு ஜோதிமணி பயப்படுகிறார் - கரூர் வேட்பாளர் செந்தில்நாதன்


கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பிபாளையம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை மலர் தூவி வரவேற்றனர்.மேலும் படிக்க



  • Lok Sabha Election 2024: இந்திரா காந்திதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் - முத்தரசன்


வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருபாட்சிபுரம், சாய்நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர்..மேலும் படிக்க



  • TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்.. 6-ஆம் தேதி வரை 41 டிகிரி செல்சியஸ்.. எச்சரிக்கை கொடுக்கும் வானிலை..


தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க



  • சாராயத்தை குடித்து வயிற்றை புண்ணாக்காமல் கள்ளை குடிக்கலாம் - அண்ணாமலை


கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று காலை பிரச்சாரம்  மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,மேலும் படிக்க



  • பாஜக ஜெயித்தால் அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றுவார்கள் - அமைச்சர் பி.டி.ஆர்.மேலும் படிக்க


 



  • மக்களவை தேர்தலை ஒட்டி, வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். 


Kanimozhi : ”தமிழ் கத்துக்கோங்க மோடி” CLASS எடுத்த கனிமொழி.. மேலும் படிக்க