Breaking News LIVE :ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சி.ஏ.ஏ. சட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி! சிறுபான்மையின மக்களுக்கு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டு, அக்கறை வந்தது போன்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார்! கூட்டாட்சி என்று சொல்லி, காட்டாட்சி நடத்த அத்தனை வேலையும் பார்க்கிறார் பிரதமர் மோடி! இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் பிரதமர் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?
- தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சிஏஏ சட்டம் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழ்நாடு வருவார், வெள்ளம் வந்தால் வரமாட்டார் என முதலமைச்சர் ஸ்டாலின், வேலூரில் மேற்கொண்டு வரும் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
முன்னாள் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உரிய ஆவணங்கள் இன்றி மூன்று கூரியர் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 16.7 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
பங்குச் சந்தை சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் இன்று முடிவடைந்துள்ளது.
நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 1487 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவர் சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
Jaffar Sadik : ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம்
“சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்கள், ரவுடிகள் போன்றவர்கள் எல்லாம் பாஜகவில்தான் இருக்கிறார்கள்” : பாஜகவை சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கனடா பிரதமர் எக்ஸ் தளத்தில் போட்ட பதிவில், ” குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 51,440 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,430 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,200 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,900 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம் அருகே பரோலில் வந்த கைதி பரமேஸ்வரன் தப்பியோடினார். அவரது தந்தையின் 16 ஆம் நாள் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கொடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் 11 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி, வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையை ஒட்டு இன்று டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி, வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.
புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் (56) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணன் உடலை கைப்பற்றி பாகூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கிறது தமிழ்நாடு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Background
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் தரப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்து தற்போது வரை நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜக எப்படியாவது கால் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசு கச்சத்தீவு விவகாரம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக - காங்கிரஸ் எல்லாம் தெரிந்தே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மேலும் அப்போது முதல் இப்போது வரை சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் முயற்சியால் அவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பாஜக தரப்பில் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிர்மலா சீதாராமன், அமித்ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -