BJP Manifesto: "எங்கள் காதுகள் பாவமில்லையா" பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதை கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க


TVK Vijay:“சமூக நீதி, சமத்துவம், சம உரிமை” - அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த விஜய்!


சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பியும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடியவர் அம்பேத்கர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் பெருமைகளையும், அவர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழி தொடர்பாகவும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். மேலும் படிக்க..


Mari Selvaraj: அம்பேத்கர் கூண்டுக்குள் இருப்பதற்கு பதில் கிடைக்கட்டும்.. இயக்குநர் மாரி செல்வராஜ் பளீச் பதில்!


அம்பேத்கரின் கனவுகளை தான் படமாக எடுத்துக் கொண்டு இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்ற, தாழ்வுகளை பற்றி பேசிய அப்படம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாரி செல்வராஜ் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன், உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என 3 படங்களை இயக்கியுள்ளார். மேலும் படிக்க


Actor Vishal: 2026-ல் கட்சி தொடக்கம் - அரசியல் வருகை குறித்து அறிவித்த விஷால்!


நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்களுக்குத் தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று விஷால் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருந்தார். அரசியல் வருகை தொடர்பாக சென்னை வட பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ”2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க


அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு  பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட  நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.மேலும் படிக்க