விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.


அம்பேத்கர் பிறந்தநாள் விழா 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு  பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட  நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.


 பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ்... 


சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு. பின்னர் தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதும் வாடிக்கையான ஒன்று எனவும் தேர்தல் முடிந்த பின் இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.




அண்ணல் அம்பேத்கர்


அண்ணல் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர் 37 ஆண்டுகள் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஏப்ரல் 14 அன்று உலகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. கிராமங்களில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கூறி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வார்கள்.


இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நவீன இந்தியாவை வடிவமைத்த மாபெரும் தலைவர்களில் ஒருவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். அண்ணலின் சிந்தனைகள் எழுத்துக்கள் அனைவருக்குமானவை. அண்ணலின் பிறந்த நாளை அனைத்து சமூகங்களும், அனைத்து சாதிகளும் இணைந்து நடத்துகின்ற மாபெரும் விழாவாக மக்கள் கொண்டாடவேண்டும். அண்ணல் அம்பேத்கரை நாம் கொண்டாடுவது, அடிப்படையில் நமக்குள் இருக்கும் சாதி, மத, இன உணர்வை அழிப்பதற்கான வழிகளில் ஒன்றாகும்.