2026-ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்களுக்குத் தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று விஷால் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருந்தார். அரசியல் வருகை தொடர்பாக சென்னை வட பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ”2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமால் 2004-ல் செல்லமே திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார், விஷால்.20 ஆண்டு கால திரைப் பயணத்தில் ரசிகர் மன்றத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மக்கள் பணி தொடர்பாக ’என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.” என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
விஷால் பேசும்போது அரசியல் மீதான ஆர்வம் குறித்து பேசி வந்தார். ’அரசியலில் ஆதாயம் எதிர்பார்த்து மக்கள் பணி செய்வது சரியானதில்லை; இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன். என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருடைய மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் விஷால். விஜய் அரசியல் வருகைக்கு அடுத்து விஷாலும் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஷால் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
விஷால் அரசியலுக்கு வந்தால் அவருடைய நிலைபாடு என்ன, என்ன பெயர் வைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.