• Pran Pratishtha: குழந்தை ராமர் சிலைக்கு முதல் பூஜை செய்த பிரதமர் மோடி.. பக்தி பரவசத்தில் அயோத்தி


அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். மேலும் படிக்க



  • DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது - உதயநிதி


தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியிருப்பது  தமிழ்நாட்டின்  ஆளும் கட்சியான திமுக, சேலம் மாவட்டத்தில்  நடத்திய தனது இரண்டாவது இளைஞரணி மாநாடுதான். இந்த மாநாட்டில் அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியதில் முக்கியமானது குறித்து இங்கு காணலாம். மேலும் படிக்க



”தெற்கில் விடியல் கிடைத்தது போல இந்தியா முழுவதும் விடியல் விரைவில் கிடைக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிறகு எனக்கு 20 வயது குறைந்து விட்டது போல தோன்றுகிறது. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளாகிவிட்டது. திமுக தோன்றி 75 ஆண்டுகளாகி விட்டது. திமுக தொடங்கியபோது இருந்த அதே எழுச்சி இன்றைக்கும் இளைஞர்களிடம் இருப்பது திமுக தலைவராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படிக்க



  • Ram Temple : 'ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் சதிவிழா!' : தொல்.திருமாவளவன் எம்.பி.,


சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பான அறிக்கையில், “ஐந்து வயது குழந்தை ராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோயில். நாடெங்கிலும் ராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக்களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இஸ்லாமியர்கள். மேலும் படிக்க



  • TN Voter List: தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..


இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் படிக்க