ராமர் கோயில் பிரதிஷ்டையை கொண்டாடும் விதமாக பழனியில் பொதுமக்களுக்கு ராமர் உருவம் பொறிக்கபட்ட ஐம்பொன் நாணயம் ரூ.5 லட்சம் செலவில் வழங்கிய நிறுவனத்தார்.


ராமர் கோயில் பிரதிஷ்டையை கொண்டாடும் விதமாக பழனியில் ஆதிக்பாபு மெட்டல் கடை சார்பில் பொதுமக்களுக்கு ராமர் உருவம் பொறிக்கப்பட்ட ஐம்பொன் நாணயம் 5 லட்சம் ரூபாயில் தனது சொந்த செலவில் 1000க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்ட சம்பவம்  பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Ram Mandir Metaverse: உட்கார்ந்த இடத்திலேயே அயோத்தி ராமரை நேரில் தரிசிக்கலாம்: எப்படி?- ABP மெட்டாவெர்ஸ் உங்களுக்காக!




உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், நாட்டில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


Actor Vijay: கோடிகளில் எலெக்ட்ரிக் கார் வாங்கிய நடிகர் விஜய்? விலையைக் கேட்டு வாயடைத்துப் போகும் ரசிகர்கள்!




இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று அயோத்தியில் நடைபெறும் ராம பிரதிஷ்டை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில பழனி அடிவாரம் தேவர் சிலை முன்பு பாஜக மற்றும் இந்து அமைப்பின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பு பூஜைகள் செய்தும் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள் இட்டவாறு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் அன்னதானம் வழங்கினர்.


ABP Nadu Top 10, 22 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!


மேலும் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடந்தது. இந்நிலையில் அடிவாரம் பகுதியில் ஆதி பாபு மெட்டல் கடை சார்பில் ஐம்பொன்னால் ஆன ராமர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் 1000க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ஒரு நாணயம் 420 ரூபாய் ஆகும். சுமார் 5 லட்சம் ரூபாயில் தனது சொந்த செலவில் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கிய சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.