நாளை மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்பத்தூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.     


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.



புதிய காற்றழுத்தம்... 8 மாவட்டங்களில் கொட்டப் போகிறது... அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!


நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, , அரியலூர் பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.


நாளை மறுதினம் (அக்டோபர் 11ம் தேதி) நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்யாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.


அக்டோபர் 12, 13 ஆகிய இரு தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்யாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்கக் கடல் பகுதிகள்:  தெற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் தெற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே,  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:  இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .


இதையும் பார்க்கலாமே : 


Noble Peace Prize : அதிகாரத்தைக் கேள்விகேட்ட டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ் மற்றும் மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா


ஒரே ஒரு ஆசிரியருடன் தமிழ்நாட்டில் 2,631 பள்ளிகள்... யுனஸ்கோ அதிரிச்சி அறிக்கை!