Noble Peace Prize : அதிகாரத்தைக் கேள்விகேட்ட டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ் மற்றும் மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா
பேச்சுரிமையை பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, பத்திரிகை உலகைச் சேர்ந்த டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ், மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா ஆகிய இருவருக்கு இவ்வாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதங்கள் ஜனநாயக நாடுகளில் பேச்சு உரிமையை நிலைநாட்டுவதுடன் அமைதியை உருவாக்க இந்த பத்திரிகையாளர்கள் முக்கிய பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நாட்டின் நோபல் குழுவின் தலைவர் பெரிட் ரீஸ் ஆண்டர்சன் கூறினார்.
ஜனநாயகத்தில் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு கடும் இடையூறு ஏற்படும்போது அச்சமின்றி உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இவர்கள் அரும்பாடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெருங்கதையாடல் மூலம் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மேற்கொண்ட சட்டவிரோதக் கொலைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தார்.
2012ல் இவர் உருவாக்கிய Rappler என்ற ஊடக தளம் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கொடுங்கோல் செயல்களை வெளிக்கொண்டு வந்தது. பத்திரிகை சுதந்திரத்தில் பிலிப்பைன்ஸ் அரசு 138வது இடத்தில் உள்ளது. இந்தியா 140வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசியாவில் விளாதிமிர் பூட்டின் அடக்குமுறைக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலான முறையில் பதிவிட்டு வருகிறார். 1993ல் இவர் உருவாக்கிய Novaja Gazeta என்ற நாளிதழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிபடுத்தி வருகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -