TN Corona LIVE Updates: தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று

நேற்று ஒரேநாளில் 12 ஆயிரத்து 652 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

இரா. ஆன்ஸ்கர் (லியோ) Last Updated: 23 Apr 2021 11:54 AM

Background

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 12 ஆயிரத்து 652 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 12 ஆயிரத்தை கடந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 526 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


நேற்று மாநிலம் முழுவதும் 59 நபர்கள் உயிரிழந்துள்ளனர், இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 12 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 789 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 8 ஆயிரத்து 863 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் முற்பகல் 12.30 மணிக்கு ஆலோசானை நடத்துகிறார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். தற்போது, பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு இந்த ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார்.


இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோதியிடன் தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை அளிக்க கோரிக்கை முன்வைத்த நிலையில் தற்போது புனேவில் இருந்து 2 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.