தமிழ்நாட்டில் வன்னியர் இன மக்களுக்கு கல்வி, மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கமும் போராட்டங்களை நடத்தி வருகிறது. இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்து 1000 நாட்களை கடந்தும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்திருந்தார்.




அதன்படி காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட் பகுதியில் நடைபெற்றது. இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுதப்பட்டது.


பின்னர் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆகிறது.‌ இந்த 1000 நாட்களில் அதிகாரம் இருந்தும், கொடுக்க மனம் இல்லாத திராவிட மாடல் திமுக அரசுக்கு மனமில்லை இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.




இது சாதி பிரச்சனை கிடையாது


இட ஒதுக்கீடு வழங்காமல் தூங்குவதை போல் நடித்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசை கண்டிக்கின்றோம். ஸ்டாலினுக்கு சமூக நீதி மீது எள்ளளவு அக்கறை இருந்தால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் இட ஒதுக்கிடை வழங்கி இருப்பீர்கள் அல்லது வழங்குவீர்கள். உங்கள் தந்தையிடம் கற்றுக் கொள்ளுங்கள்.




இது ஏதோ ஒரு சாதி பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர் சமுதாயம். மற்றொரு பெரும்பான்மை சமுதாயம் பட்டியல் என சமுதாயம். இரண்டு சமுதாயமும் முன்னேற வேண்டும் என்று ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடி வருகிறார் .மருத்துவர் ராமதாஸ் ஆறு இட ஒதுக்கீடுகளை வழங்கி கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நான்கு தேசிய அளவில் இரண்டு என ஆறு இட ஒதுக்கீடுகள் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.


திராவிட கட்சிகளின் சூழ்ச்சி


திராவிட கட்சிகளின் சூழ்ச்சி, பெரிய சமுதாயம் வளரக்கூடாது என சூழ்ச்சி செய்கிறார்கள். படித்துவிட்டு முன்னுக்கு வந்து விட்டால் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என சூழ்ச்சி, குறிப்பாக திமுக. ஸ்டாலினை சுற்றி 4 வியாபாரிகள் இருக்கிறார்கள். அமைச்சர் என்ற பெயரில் வியாபாரிகள் இருக்கிறார்கள். 


20% இட ஒதுக்கீடு எப்படி கொடுத்தார்கள் என்றால் அம்பாச சங்கர் மற்றும் சட்டநாதன் ஆணையம் ஆகிய பரிந்துரைகள் எல்லாம் சேர்த்து தான் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். திமுகவில் இருப்பவர்கள் பொய் புளுபவர்கள். ஒரு சிலர் முட்டாள் பசங்கள். தொடர்ந்து பொய் சொல்லி சொல்லி, உண்மையாக மாற்ற நினைக்கிறார்கள். ஒரே பொய்ய தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே தடை செய்து விட்டது என பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றமே இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என கூறி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.


நிபந்தனை இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு 


திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு அள்ளிப்போம். 15 விழுக்காடு கையெழுத்து போடுங்கள், நிபந்தனை வேண்டாம். சீட்டு கீட்டு எதுவும் வேண்டாம். அப்படி செய்யவில்லை என்றால், வீடு வீடாக செல்வோம் தெருத்தெருவாக செல்வோம். ஸ்டாலின் வன்னியர் விரோதி என வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம். மானமுள்ள ஒரு வன்னியர் கூட, திமுகவிற்கு வாக்களிக்க மாட்டான் என தெரிவித்தார்.




திமுகவிற்கு வாழ்வு கொடுத்ததை வன்னியர்கள் தான். திமுக முதல் தேர்தலில் போட்டியிட்டு 16 இடங்கள் வெற்றி பெற்ற போது, அது அனைத்தும் வட தமிழகத்தில் தான் வெற்றி பெற்றது . 1965இல் 45 தொகுதிகள் வட தமிழ்நாட்டில் தான் வெற்றி பெற்றார்கள்‌ என தெரிவித்தார்.


துரைமுருகன் ஏன் துணை முதலமைச்சர் ஆகவில்லை ?


துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாமே. திமுகவிற்காக அதிகம் உழைத்தவர் அவர் தான். அவர் வன்னியர் சமுதாயம் என்பதால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கவில்லை. ஸ்டாலின் தன்னைச் சுற்றி வியாபாரிகளை வைத்துள்ளார். வியாபாரிகளுக்கு வியாபாரம் தான் தெரியுமே தவிர, அவர்களுக்கு நிர்வாகம் தெரியாது. வியாபாரிகள் தான் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். வியாபாரிகளுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா ‌? என் கேள்வி எழுப்பினார்.




இந்தியாவில் ஓபிஎஸ்சி கணக்கெடுப்பு எடுப்பதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இருவருக்குமே விருப்பம் கிடையாது. எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று எம்ஜிஆரை போற்றுகிறோம். எம்ஜிஆர் 6 மாதங்கள் இன்னும் உயிரோட இருந்திருந்தால், அப்போது இட ஒதுக்கீடு கொடுத்திருப்பார். எம்ஜிஆரை நேரில் பார்க்க விடாமல் மிகப்பெரிய சூழ்ச்சி மேற்கொண்டார்கள். இட ஒதுக்கீடு உடனடியாக கொடுக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.