TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

Tamil Nadu 10th Result 2024 LIVE Updates: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனடியாக அறிய, ஏபிபி நாடு செய்தி இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 10 May 2024 10:37 AM
முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து..!

Tamil Nadu 10th Result 2024: 10ம் பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மறுகூட்டல்/ மறுமதிப்பீடு எப்போது?

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சிறைவாசிகள் 87.69% பேர் தேர்ச்சி

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 260 சிறைவாசிகளில், 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜுலை 2ம் தேதி முதல் துணைத்தேர்வுகள்..

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கான உடனடி துணைத்தேர்வுகள் ஜுலை 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

சரிந்த சென்னை - தேர்ச்சி விகிதத்தில் 37வது இடம்

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சென்னை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளிகள் வெறும் 79.07 சதவிகித தேர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளன. அதாவது மாநில அளவில் சென்னை 37வது இடத்தில் உள்ளது.

துணைத்தேர்வுகள் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் உடனடியாக துணைத்தேர்வை எழுத, நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 90.48% தேர்ச்சி 

Tamil Nadu 10th Result 2024: மயிலாடுதுறை மாவட்டத்தில் 90.48% தேர்ச்சி 


மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 549 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 10 ஆயிரத்து 449 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.48 ஆக உள்ளது.  வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்கள் 86.61- %
மாணவிகள் 94.30 - %


 

திருவண்ணாமலை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

Tamil Nadu 10th Result 2024:  திருவண்ணாமலை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை,  மாணவர்கள் 15917 பேரும்,  மாணவிகள் 15017  பேரும் எழுதினர். தேர்சி பெற்ற மாணவர்கள் 12936


தேர்ச்சி பெற்ற மாணவிகள் - 13698


தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள்  - 26,634


மாணவர்கள் தேர்வு சதவீதம் - 81.27


மாணவிகள் தேர்ச்சி சதவீதம் - 91.22


மொத்த மாணவர்களின் தேர்ச்சி - 86.10 சதவீதம்



மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் 36 இடத்தில் திகழ்கிறது

திருவாரூர் மாவட்டம் 92.49 சதவிகிதம் தேர்ச்சி 

Tamil Nadu 10th Result 2024: திருவாரூர் மாவட்டம் 92.49 சதவீதம் தேர்ச்சி 


திருவாரூர் மாவட்டத்தில் 7208 மாணவர்கள்,  7698 மாணவிகள் உட்பட 14906 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில்  6448 மாணவர்கள், 7338 மாணவிகள் என 13 ஆயிரத்து 786 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்ச்சி விகிதம் 92.49 சதவீதம் ஆகும்.  கடந்தாண்டை விட  1.7 சதவீதம் கூடுதல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது

தூத்துக்குடி தேர்வு முடிவுகள்

Tamil Nadu 10th Result 2024: தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்


தேர்வு எழுதிய மாணவர்கள்- 10534


தேர்ச்சி பெற்றோர்- 9645


மாணவிகள்- 11309


தேர்ச்சி பெற்றோர்- 10973


தேர்ச்சி விகிதம்: 94.39%

மாணவர்கள் தவிப்பு

Tamil Nadu 10th Result 2024: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் தடை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு மாணவர்கள் தவிப்பு. காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் 3 மணி நேரம் கடந்தும் இதுவரை வரவில்லை.

தமிழில் சதமடிக்காத மாணவர்கள்

Puduchery 10th Result 2024: புதுச்சேரியில் நடைபெற்ற நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், கணிதத்தில் 355 மாணவர்களும், சமூக அறிவியலில் 101 மாணவர்களும், ஆங்கிலத்தில் 20 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் யாரும் 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை.

அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம்

Puduchery 10th Result 2024: புதுச்சேரியில் நடைபெற்ற நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,  அரசு பள்ளிகள் 78.08% சதவிகித தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.

புதுச்சேரியில் 107 பள்ளிகள் 100% தேர்ச்சி

Puduchery 10th Result 2024: புதுச்சேரியில் நடைபெற்ற நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் 89.14 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 107 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Puduchery 10th Result 2024: புதுச்சேரியில் நடைபெற்ற நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,  89.14 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாற்றுத்திறனாளிகள் 92.45% பேர் தேர்ச்சி

Tamil Nadu 10th Result 2024: நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளிகளில், 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

Tamil Nadu 10th Result 2024: நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 87.90 சதவிகிதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 91.77 சதவிகிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் 97.43 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இருபாலர் பள்ளிகள் 91.93 சதவிகிதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவிகிதமும் தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் முதலிடம்

Tamil Nadu 10th Result 2024: நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில், 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை (97.02%) மற்றும் ராமநாதபுரம் (96.36%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாவட்ட அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

பாடவாரியான தேர்ச்சி விகிதம்

Tamil Nadu 10th Result 2024: நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவிகிதம் பேரும், அறிவியலில்96.72 சதவிகிதம் பேரும் மற்றும் சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம்  பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள்..

Tamil Nadu 10th Result 2024: நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

பாடவாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள்..

Tamil Nadu 10th Result 2024: நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

Tamil Nadu 10th Result 2024: 12 ஆயிரத்து 625 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், நான்காயிரத்து 105 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆயிரத்து 364 அரசுப்பளிகளும் அடங்கும்.

அறிந்த மாணவர் தேர்ச்சி விகிதம்

Tamil Nadu 10th Result 2024: மாணவிகளுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 5.95 சதவிகிதம் சரிந்துள்ளது. 

8.18 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி..

Tamil Nadu 10th Result 2024: நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

88.58% மாணவர்கள் தேர்ச்சி

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.58% அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளே அதிகம் தேர்ச்சி

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிகம்  தேர்ச்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

0.16% சதவிகதம் பேர் கூடுதல் தேர்ச்சி

கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - 91.55% பேர் தேர்ச்சி

Tamil Nadu 10th Result 2024: தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வு எழுதிய 9.10 லட்சம் மாணாக்கர்களில் சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

டிஜிலாக்கரில் தேர்வு முடிவுகள்..!

Tamil Nadu 10th Result 2024: சிபிஎஸ்இ, சி.ஐ.எஸ்.இ.ஐ போன்ற கல்வி வாரியங்களை தொடர்ந்து தமிழக தேர்வு துறையும் பொதுத் தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் தளம் வழியாக அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக நடப்பாண்டு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் டிஜிலாக்கர் தளத்தில் வெளியிடப்பட உள்ளன.

மாணவர்களே தயார்..!

Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் சரியாக 30 நிமிடங்களில் வெளியிடப்பட உள்ளது. அரசு ஏற்கனவே அறிவித்த அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களது முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விகிதம்..

கடந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்,  மாணவர்கள் 88.16% மற்றும் மாணவிகள் 94.64% சதவிகிதம் என மொத்தமாக 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

முடிவுகளை எங்கு அறியலாம்..!

காலை 9.30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in  அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதோடு, 



  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.

  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

Background

Tamil Nadu 10th Result 2024 LIVE Updates: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4,47,061 மாணவிகள் மற்றும், 4,47,203 மாணவர்கள் என மொத்தம் 8,94,264 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.  அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில்,  இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?


மாணவ, மாணவியர்கள் தங்களது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எளிதில் அறிந்துகொள்ள, பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, 



  • காலை 9.30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in  அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.

  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விவரம்:


கடந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய, 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 88.16% மற்றும் மாணவிகள் 94.64% சதவிகிதம் என மொத்தமாக 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றனர். 10,808 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதிய நிலையில், 9,703 பேர் தேர்ச்சி பெற்றர். இதேபோல் 264 சிறைவாசிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியதில்,  112 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.16 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.