10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு பள்ளிகள் 87.90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

1.  அரசு பள்ளிகள் 87.90%
2. அரசு உதவு பெறும் பள்ளிகள்  91.77%
3. தனியார் சுயநிதி பள்ளிகள் 97.43%
4. இருபாலர் பள்ளிகள் 91.93%
5. பெண்கள் பள்ளிகள் 93.80
6. ஆண்கள் பள்ளிகள்  83.17%

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த  8,94,264 மாணவ, மாணவியர் எழுதினர். மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061 மாணவர்களின் எண்ணிக்கை: 4,47,203

அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளை, http://tnresults.nic.in  அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். அதேபோல்,  மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேரில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - Fail ஆனவர்கள் இதை மறக்காதீங்க!