விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியலில் வழிவிடுமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பெரிய வகை பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்படும். இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு தொழிற்சாலையில் வழக்கம்போல் பணியை துவங்கியபோது, மூலப்பொருட்கள் கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகின. இந்த நிலையில் குமார், பெரியசாமி, செல்வம் என்ற வீரகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதும் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்த சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இதில் 4 நபர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலையின் உரிமையாளர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பட்டாசு அலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், உயிரிழத நபர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: சிவகாசி வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !
Sivakasi | வெடித்து சிதறிய பட்டாசு ஆலை... மீட்கும் பணி தீவிரம்: பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்..
Covid 19 Cases in India:ப்ளீஸ் எச்சரிக்கையா இருங்க.. 1500 ஐ கடந்த ஒமிக்ரான்.. தமிழக நிலவரம் என்ன?