நடிகர் அஜித்துடன் பயணிக்கிற வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் புகழ் கூறியுள்ளார். 


 “ அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்...❤️”  என்று பதிவிட்டுள்ளார். 






முன்னதாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.


இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டுவந்தனர்.


இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இதனையடுத்து படத்தின் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தின் Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து படத்தின் மேக்கிங் காட்சி வெளியிடப்பட்டது. இதில் பைக் ஸ்டண்டை மேற்கொண்ட போது அஜித் கீழே விழுந்த காட்சி இணையத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து படத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டதுஇந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் ஹெச். வினோத்துக்கே கொடுத்துள்ளார். இந்தப்படத்தில், ஒரு முக்கிய பிரச்னையை பேச இருப்பதாக அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஹெச். வினோத் கூறியது குறிப்பிடப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.