சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

மழை பாதிப்புகள் நீடிப்பதால் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Continues below advertisement

சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை, பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் நீடிப்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

முன்னதாக, அந்தமான் அருகே வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, விருதுநகர், தென்காசி, கோவை, தருமபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். 

 

 

 

Watch video: ஆட்சி மாறலாம்.. காட்சி மாறாது.. வருந்தும் பெரும்பாக்கம் மக்கள்.! நிலைமையை காட்டும் வீடியோ!

Kurup Twitter Review: ட்விட்டரில் ‘க்ளாப்ஸ்’ வாங்கிய குருப் ; தியேட்டர்ல பாத்தவங்களோட ஒர்த் ரிவ்யூஸ்..

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

 

 

Continues below advertisement