கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 13,14,15,16 ஆகிய நாட்களில் கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதால் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, அந்தமான் அருகே வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, விருதுநகர், தென்காசி, கோவை, தருமபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்