மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் குருப். இந்தத் திரைப்படத்தை 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கர் சல்மானை திரையுலத்திற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். குருப் திரைப்படம் சுகுமாரா குருப் என்ற குற்றவாளியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.


தனது இன்சுரன்ஸ் பணத்தை பெறுவதற்காக குருப் தான் இறந்து விட்டதாக நாடமாட, தனக்கு பதிலாக சாக்கோ என்பவரை காரில் வைத்து எரித்து கொன்றான். பின்னாளில் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது. இதனிடையே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற குருப் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. 1984 ஆம் ஆண்டு கேரளாவையே உலுக்கிய இந்த கொலைவழக்கை மையப்படுத்திதான் இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 



குருப் திரைப்படத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் வெளியீட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பட ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே சென்றது. இதனால் கடந்த ஒரு வருடமாக படம் வெளியாகமலே இருந்தது. இந்த நிலையில்தான் பிரபல ஓடிடி தளமான நெட் ப்ளிக்ஸ் குருப் படத்தை 40 கோடிக்கு வாங்க முன் வந்த நிலையில், மம்முட்டியின் அன்புக் கட்டளைக்கு இணங்க குருப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குருப் திரைப்படம் எப்படி என ட்விட்டர் வாசிகள் ட்விட்டர் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர். குருப் ட்விட்டர் விமர்சனம் ஒரு பார்வை.
































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண