ஆயுத பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க, 2 நாட்களுக்கு கூடுதல் பேருந்து நிலையங்கள் குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆயூத பூஜையை முன்னிட்டு நாளை( செப்டம்பர் 9ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள்( செப்டம்பர் 10 ஆம் தேதி) சென்னையிலிருந்து பயணிகள், சொந்த ஊருக்குச் செல்லும் வசதியாக, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, போக்குவரத்து துறை அமைச்சர் அறுவுறுத்தலின்படி, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, நாளை ( செப்டம்பர் 30ம் தேதி), நாளை மறுநாள் (அக்டோபர் 1ஆம் தேதி) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Also Read: Ayudha Pooja 2022: வரலாறு, முக்கியத்துவம்: ஆயுத பூஜையை கடைபிடிக்கும் முறை


அதனடிப்படையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள், மற்றொரு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதர பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:


திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர் சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள். மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் ஆகியவை தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேருந்துகள் இயக்கப்படும் நிலையங்கள் மற்றும் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விவரங்கள்:




பூவிருந்தவல்லி பைபாஸ் (பூவிருந்தவல்லி பணிமனை அருகில்):


வேலூர் , ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் வழியாக செல்லும் என கூறப்படுகிறது.


கோயம்பேடு பேருந்து நிலையம்:


மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: Platform Ticket Price Hike: பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அதிரடி உயர்வு- தென்னக ரயில்வே


Also Read: பழனி மக்களுக்கு இனிப்பான செய்தி...மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்