ஒட்டன்சத்திரம், பழனி இடையேயான நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் முடிவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, 172.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


 






இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இது பாதசாரிகளுக்கான நடைபாதை மற்றும் வழியோர வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளின் 2022-23 ஆண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது முடிவடைந்ததும், போக்குவரத்து நெரிசல் குறையும். புகழ்பெற்ற கோவில் நகரமான பழனிக்கு இணைப்பு வழி அதிகரிக்கும்" என பதிவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள 500 கி.மீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. இதற்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்தது.


6,600 கோடி செலவில் மதுரை மேற்கு சுற்றுச் சாலை, கோவை அரைவட்டச் சாலை, கோவை-சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.


திருவண்ணாமலை -கள்ளக்குறிச்சி (65 கி.மீ.), வள்ளியூர் - திருச்செந்தூர் (70 கி.மீ.), கொள்ளேகால் - ஹனூர் - எம்.எம். ஹில்ஸ் - பாலர் ரோடு - டி.என் எல்லை மேட்டூர் (30 கி.மீ.), பழனி - தாராபுரம் (31 கி.மீ.), ஆற்காடு - திண்டிவனம் (91 கி.மீ.) ஆகியவை அடங்கும். ., மேட்டுப்பாளையம்-பவானி (98கிமீ), அவிநாசி-மேட்டுப்பாளையம் (38கிமீ) மற்றும் பவானி-கரூர் (77கிமீ) ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.


30 கிலோமீட்டர் நீளமுள்ள மதுரை சாலை எய்ம்ஸ், மதுரை-கொச்சி சாலை மற்றும் கொடை சாலையை இணைக்க உள்ளது. மேலும், மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த மதுரை பேருந்து நிலையத்தையும், மத்திய காய்கறி மற்றும் பூ சந்தையையும் NH44 (ஸ்ரீநகர்-கன்னியாகுமரி சாலை) உடன் இணைக்கும். இதன் திட்டச் செலவு ரூ.1,200 கோடியாகும்.