பண்டிகைகளை முன்னிட்டு ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை(Platform Ticket Fare) உயர்த்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலையை ரூ.10-லிருந்து 20-ஆக உயர்த்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இவ்விலை உயர்வானது வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கள் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளன. பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், 8 ரயில் நிலையங்களில் விலை உயர்வானது அமல்படுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
- சென்னை எம்.ஜி.ஆர். செண்ட்ரல் ரயில் நிலையம்
- சென்னை எக்மோர் ரயில் நிலையம்
- தாம்பரம் ரயில் நிலையம்
- காட்பாடி ரயில் நிலையம்
- செங்கல்பட்டு ரயில் நிலையம்
- அரக்கோணம் ரயில் நிலையம்
- திருவள்ளூர் ரயில் நிலையம்
- ஆவடி ரயில் நிலையம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில், பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Also Read: Special Buses: ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் பேருந்து நிலையங்கள்: அட்டவணை அறிவிப்பு