பீகார் மாநிலத்தில் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்குவீர்களா என்ற கேட்கப்பட்ட கேள்வி, இப்போது, நாப்கின் கேட்பீர்கள், பிறகு காண்டமும் கேட்பீர்கள் போல.” என்று  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கார்ப்ரேசனின் நிர்வாக இயக்குநர் ஹர்ஜோத் கவுர் ` அளித்த பதில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பீகாரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பெண்களில் முன்னெற்றத்தை உறுதி செய்யும் வகையில், சசாக்த் பெட்டி, சம்ரீத் பீகார்’ (Sashakt Beti, Samriddh Biha-Empowered Daughters, Prosperous Bihar) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில், இத்துறைக்கான நிர்வாக இயக்குநர் ஹர்ஜோத் கவுர் ( Harjot Kaur Bhamra) உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்று மாணவர்கள் கலந்துரையாடினார். 






 ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் `அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்’ என்ற கருத்தரங்கில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் மகளிர் வளர்ச்சி குறித்து உரையாடி கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தவிதம் அனைவரையும் அதிச்சிக்குள்ளாகியுள்ளது.


மாநிலத்தில், மகளிர் நலனை கருத்தில் கொண்டு `குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வழங்குவீர்களா?' என்று  ஒரு பள்ளி மாணவி கேட்டார்.


இதற்கு மாணவிகளிடம் பதிலளித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி,  ``இப்ப நாப்கின் கேட்பீர்கள்; பின்னர், அரசு உங்களுக்கு ஜீன்ஸ், அழகான காலணிகள் வேண்டும் என்று கேட்பீர்கள் இல்லையா! கடைசியாக நீங்கள் அரசிடன் விலையில்லா காண்டம் வழங்குமாறு கேட்பீர்கள்.! என்று பதிலளித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒரு பெண் அதிகாரி இப்படி பேசியிருப்பது சரியானதல்ல என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.


கடைசியில் காண்டம்கூட எதிர்பார்ப்பீர்கள்” என்று அநாகரிக முறையில், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கேட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


அப்போது ஒரு `மாணவி ` நிறைய நாடுகளில் அரசுகள் நாப்கின்களை இலவசமாக வழங்குகிறது. எங்களுக்கு 20 முதல் 30 ரூபாய் வரையிலான சானிட்டரி நாப்கின்களை அரசால் வழங்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்தக் கேள்வியை ஐ.ஏ.எஸ். அதிகாரி எதிர்பார்த்திருக்க மாட்டார் போல. மாணவியிடம், அரசே விலையுயர்ந்த ஷூக்களை இலவசமாக வழங்கக்கூடாதா என்று கேட்பீர்கள் என்று அநாகரிகமாக பேசியுள்ளார். குடும்ப கட்டுப்பாட்டு சாதனங்களை இலவசமாக கொடுங்கள் என்று சொல்வீர்கள். என்று மாணவிகளிடம் பேசியுள்ளார்.


கேள்வி கேட்ட அந்த மாணவி, ஐ.ஏ.எஸ் அதிகாரி கவுரை விடுவதாக இல்லை. ``அரசைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பது இந்த மக்கள்தானே... எங்களின் வாக்குகள்தானே அரசை உருவாக்குகின்றன...'' என்று தைரியமாக கேட்டுள்ளார்.


இப்படி பேசிய மாணவிக்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரி, அலட்சியமான பதிலை அளித்தார். `அப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம்; நீங்கள் வாக்களிக்கவே வேண்டாம். அனைவரும் பாகிஸ்தானை போலவே மாறிவிடுங்கள் அங்கு சென்றுவிடுகள்.” என்று கூறியுள்ளார்.


ஒரு பெண் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் மாதவிடாய் கால பொருட்களுக்கு நிதி உதவியும், இலவச நாப்கின்களை வழங்கி வரும் சூழலில் மானிய விலையில் நாப்கின் கேட்டதற்கு இப்படியான பதிலை கூறியிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.