தமிழ் திரையுலகின், முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராக திகழ்ந்த சௌகார் ஜானகிக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   


இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு இன்று அறிவித்துது. நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.   


சௌகார் ஜானகி: இவரது இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி. சௌகார் எனும் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சௌகார் ஜானகி என்ற அழைக்கப்படுகிறார். இவருக்கு 15 வயதில் பால்ய விவாகம்  நடைபெற்றது.முதலில், குடும்ப வறுமை காரணமாக திரைத் துறைக்கு வந்ததாக பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். முதலில் கவர்ச்சியான வேடங்களில் நடிப்பதற்கு அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், இவரின் வசன உச்சரிப்பு, முக பாவனை இவரை தனித்துவமான நடிகையாக மாற்றியது.  ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட உட்சபட்ச நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். 


                                               


எதிர்நீச்சல், உயர்ந்த மனிதன், பார் மகளே பார், உயர்ந்த மனிதன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, இரு கோடுகள், பார் மகளே பார்  போன்ற திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் இன்றளவும் மக்கள் நினைவில் நிற்கின்றன. மிகவும், இயற்கையான நடிகை என்று அறியப்பட்டார்.  கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலான தனது திரைவாழ்க்கையில் 500க்கும் மேலான படங்களிலும், 300க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்பின் மாறுபட்ட பன்மீயத் திறன்களை  முழுமையாக புரிந்து கொண்டவர்.  


படைப்புத் துறையில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசு இன்று இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்து கவுரப்படுத்தியுள்ளது. 


இருப்பினும், இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 18 (1)-இன்படி, தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா, பத்ம ஸ்ரீ  எனும் அடைமொழியைப்  பயன்படுத்தக் கூடாது. அவசியம் கருதினால் “பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது (Not being a title, no Padma Award recipient, should prefix or suffix the name of the award to his/her own - மத்திய அரசு).  


பின்னணி: 


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது 'தனித்துவமான பணியை'யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக வழங்கப்படுகிறது. 


Republic Day 2022 Award: பத்ம விருதுக்குள் வந்த கூகுள், மைக்ரோசாப்ட்! சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவுக்கு பத்ம பூஷன்! 


Republic Day Award 2022: ’தமிழ்க் கவிஞர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதை சமர்ப்பிக்கிறேன்’ - சிற்பி பாலசுப்பிரமணியம் பேட்டி