இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகள் பத்ம விருதுகள். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.


கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமை சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


தலைசிறந்தும், அரிய வகையிலும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷன், மிக உயரிய வகையில் தலைசிறந்து சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷன், எந்த துறையிலும் தலைசிறந்து பணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன.




இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெல்லாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


1972ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை கரக்பூர் ஐஐடியில் உலோக பொறியியலில் பட்டம் பெற்றார். அதனையடுத்து அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்த சுந்தர் பிச்சை 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனையடுத்து தன் உழைப்பாலும், திறமையாலும் அந்நிறுவனத்தின் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டார்.




அதேபோல் பத்மபூஷன் விருது பெறும் சத்யா நாதெல்லா 1967ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர் விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டமேற்படிப்பு முடித்தார். 




அதன் பின்னர் அவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1992ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்த சத்யா, அந்த நிறுவனத்திற்கு பல்வேறு பங்களிப்பை செய்திருக்கிறார். இதனையடுத்து அவர் 2014ஆம் ஆண்டு அந்நிறுவத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டார். பத்ம பூஷன் விருது பெறும் சுந்தர் பிச்சைக்கும், சத்யா நாதெல்லாவுக்கும் பலர் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.




இவர்கள் மட்டுமின்றி, பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன், சமூக செயற்பாட்டாளர் தாமோதரன், இசைக்கலைஞர் ஏகேசி நடராஜன், முத்துகண்ணம்மா ஆகியோருக்கும்  பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Republic Day Award 2022: பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன்.. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் - முழு விவரம்!!