ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாக்ஸ்கான் நிறுவன செயல் துணைத்தலைவர்..
இதற்கிடையே, நளினியின் அன்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் எனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இந்தக் கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் தமிழ்நாடு அரசு மௌனம் காத்து வருகிறது. அதனால் தனது மகளுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு நளினிக்கு 30 நாள்கள் பிணை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பத்மா தொடர்ந்த வழக்கின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அந்த மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vijay Rolls Royce Case: ரோல்ஸ் ராய்ஸ் கார் கேஸில் விஜய்க்கு நாளை தீர்ப்பு...
NASA | விண்வெளியில் உணவு உற்பத்திக்கான ஐடியா வேண்டும்.! நாசா அறிவித்துள்ள ஃபுட் சேலஞ்ச்!