Bigg Boss Ultimate: 'தோற்றுப்போன வெறுப்போட திரும்ப வரான் நெருப்போட...'- பிக்பாஸ் அல்டிமேட்டில் கவிஞர் சினேகன்

Bigg Boss Ultimate Tamil Contestant: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. பிக்பாஸ் 5வது சீசனின் மாபெரும் இறுதிப்போட்டி கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியின் வெற்றியாளராக ராஜூ வெற்றி பெற்றார். இந்த இறுதிப்போட்டி நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய தொடருக்கான அறிவிப்பும் வெளியானது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தது. இந்த புதிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை 24 மணிநேரமும் கண்டுகளிக்கலாம்.

Continues below advertisement

இதைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள சில போட்டியாளர்கள் தொடர்பான தகவல் வெளியாகியனது. அதன்படி இந்தப் போட்டியில் வனிதா விஜய்குமார், அனிதா சம்பத், கவிஞர் சினேகன், பாலாஜி முருகதாஸ், ஷெரின், ஷாரிக், நகைச்சுவை நடிகர் பரணி, நடிகை ஓவியா, ஜூலி, நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்ட சிலர் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரியவந்தது. 

 

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஹாட்ஸ்டாரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கவிஞர் சினேகன் இடம்பெற்று ஒரு பாடல் வரிகளை எழுதுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர், "தோற்று போன வெறுப்போட திரும்ப வரான் நெருப்போட ஆட்டம் அனலா இருக்கும். இந்த கூட்டத்திற்கே சவாலா இருக்கும். ஆரம்பிக்கலாங்கலா"  என்ற வரிகளை எழுதி வாசிக்கிறார். 

அதன்பின்னர் பிக்பாஸ் இடம் இது யாருடைய கம்பேக் என்று அவர் கேட்கிறார். அதற்கு பிக்பாஸ் இது உங்களுடைய கம்பேக் தான் என்று கூறுகிறார். இதன்மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் 24 மணிநேரமும் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை கண்டுகளிக்கலாம் என்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  மேலும் இனி வரும் நாட்களில் அடுத்த போட்டியாளர்கள் யார் யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: பாவனிக்கு இதனாலதான் முத்தம் கொடுத்தேன்.. மனம் திறந்த பிக்பாஸ் அமீர்

Continues below advertisement