கன்னியாகுமரிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக்கூடும். 


மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் இருந்து தெற்கு ஆந்திராவரை நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும். இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இன்னும் சில நாள்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையை பொறுத்தவரை காலையிலிருந்து மிதமான மழை பெய்துவருகிறது.


இந்நிலையில், சென்னை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்வதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


இதற்கிடையே கரூர், சேலம், தேனி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளதால் மேலும் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Weather report: மழை.. மழை.. 8 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்!


தொடர் மழை எதிரொலி - வைகை அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்வு...!


மயிலாடுதுறையில் தொடர் மழை - காவல்நிலைய மதில் சுவர் சாலையோரம் இடிந்து விழுந்தது


விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்க்கும் மழை... நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!


Chennai Rain | சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய பெய்த கனமழை..! மழை அளவு எவ்வளவு தெரியுமா..!