திருச்செந்தூர் அருள்மிகு சுப்பரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாடு குறித்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: திருக்கோயிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.  


Ramarajan | ‛வதந்திகளை நம்ப வேண்டாம் ’ - ராமராஜன் பூரண நலம்!




பேராவூரணியில் அதிமுக பொன்விழா பேரணி - முன்னாள் எம்எல்ஏ சட்டையை இழுத்த நிர்வாகியால் மோதல்


திருக்கோயிலை சுற்றியுள்ள பனை பொருட்கள், கடல்  சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ள கடைகளைவிட அதிகளவில் விற்பனை கடைகள் அமைக்கப்படும்.  கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு புகார் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது இன்னும் இரண்டு நாட்களில்  நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே தற்போது ரைடு நடைபெற்று வருகிறது தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தவறு செய்திருந்தால் நிச்சயம் அவரும் விசாரணை செய்யப் படுவார் என சேகர் பாபு தெரிவித்தார். 


கடலூரில் குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன் கைது