1.
க் கோவளம் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயன்ற நிலையில் ரோந்து கப்பல் விசைப்படகில் மோதியதால் நீரில் முழ்கிய ராஜ்கிரன் என்ற மீனவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
2. 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
3. ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் 10 மூட்டைகளில் 3000 கிலோ விரலி மஞ்சளை மரைன் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை
4. போலியான ஆன்லைன் பதிவு மூலம் கேபிள் டிவி நிறுவனத்தை ஏமாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
5. தென் மண்டல ஐஜி தலைமையில் மதுரையில் நடைபெற்ற காவலர் குறைதீர் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பங்கேற்பு
6. சிவகங்கை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் படிவம் இல்லாததால், சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர் காப்பீடை பதிய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
7. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே 1.50 கோடியில் கண்மாயில் பறவைகளுக்கான தீவு அமைகிறது.
8. காரைக்குடி அருகே புதுவயல் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
9. மதுரை மதுரை உட்பட (20.10.2021) டெல்டா மாவட்டங்கள், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
10. தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளஞ்சிறார் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு