டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன் என்பது அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியதை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் டாஸ்மாக்கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை, எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் படிக்க: Ashes Series Record: 140 ஆண்டுகால ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் முறியடிக்கப்படாத சாதனைகள் என்னென்ன தெரியுமா...?


அதில் தொழில் தகராறு சட்டம் மற்றும் தொழிற்சங்க சட்டத்தின்படி , வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளது சட்டவிரோதம் என்றும் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


மேலும் இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால், பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.vijayakanth | 'Iam Back ' - மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் விஜய்காந்த்! 


இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றியது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையும் படிக்கலமே: ABP Exclusive: முதுகுளத்தூர் மணிகண்டனை போலீசார் விசாரிக்கும் அதிர்ச்சி வீடியோ! கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்!


ஏற்கெனவே காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை டாஸ்மாக் கடை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண