கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உபகரணங்கள் வாங்க மதிப்பீடு செய்யும் சிறப்பு முகாம் ஏழு இடங்களில் நடைபெற உள்ளது. இதனை வரவேற்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சருக்கும், மின்சாரத் துறை அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.




கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த மாதம் 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்த நிலையில் திடீரென மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 25 மணி நேரம் நடைபெற்ற தர்ணா போராட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து விரைவாக முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் தனது போராட்டத்தை வாபஸ் பெற்று இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அப்போது செய்தியாளரிடம் தெரிவித்தார்.




 


மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக் இணங்க கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு கட்டித்தர "விடியல் நகர்" திட்டத்தையும் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


குளித்தலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் மாற்றுத் திறனாளிகளுக்கு கரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருவதாகவும், சிலர் சுய விளம்பரத்திற்காக மாவட்ட நிர்வாகத்தை குறை கூறி வருவதாக மறைமுகமாக நாடாளுமன்ற உறுப்பினரை குற்றம்சாட்டினார். 




இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக்குறிப்பில் ஒன்றில் வருகின்ற 13. 12. 2021 முதல் 22. 12. 2021 வரை கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் உபகரணங்கள் வழங்க மதிப்பீடு செய்யும் முகாம் கீழ்கண்ட தேதியில் நடைபெற உள்ளதாக தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் செய்தி குறிப்பில் வெளியிட்டார்.


அந்த அறிவிப்புக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில் கரூர் மாவட்டம், கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்கண்ட வட்டாரங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாபெரும் ADIP முகாம் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.




கடந்த மாதம் 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அப்போது அவருக்கு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை கரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் நடைபெற இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடு சர்ச்சைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.