உலகப் புகழ் பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள முதல் போட்டியில்  ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை முறியடிக்கப்படாத சில சாதனைகளை கீழே காணலாம்.



  • ஆஷஸ் டெஸ்ட் தொடரிலே அதிக ரன்கள் அடித்த வீரராக டான் பிராட்மேன் வலம் வருகிறார்.

  • பிராட்மேன் 1928 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில் 19 சதங்களுடன் 5 ஆயிரத்து 28 ரன்கள் குவித்துள்ளார்.

  • டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேக் ஹாப்ஸ் 12 சதங்களுடன் 3 ஆயிரத்து 636 ரன்களை குவித்துள்ளார்.





  • ஆஷஸ் டெஸ்ட் தொடரிலே அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் பிராட்மேன் 19 சதங்களுடன் தன் வசம் வைத்துள்ளார்.

  • ஆஷஸ் தொடரில் ஒரு இன்னிங்சில் தனிநபர் அதிகபட்சமாக 1938ம் ஆண்டு இங்கிலாந்தின் சர் லியோனர்ட் ஹட்டன் 364 ரன்கள் குவித்ததே இன்று வரை தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

  • 1882ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் இதுவரை நான்கு பேர் மட்டுமே முச்சதம் அடித்துள்ளனர்.





  • டான் பிராட்மேன், பாப் சிம்ப்சன், பாப் கவ்பர் மற்றும் லியோனர்ட் ஹட்டன் ஆகியோர் முச்சத நாயகன்கள் ஆவர்.

  • ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக ஷேன் வார்னே வலம் வருகிறார்.

  • 52 வயதான ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 1993ம் ஆண்டு 2007ம் ஆண்டு வரை விளையாடி 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் தன் வசம் வைத்துள்ளார்.





  • ஒரு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மட்டும் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் டான் பிராட்மேனே தன்வசம் வைத்துள்ளார்.

  • அவர் 1903ம் ஆண்டு 974 ரன்களை ஒரே ஆஷஸ் டெஸ்ட் தொடரில் எடுத்துள்ளார்.

  • போன்ஸ்போர்ட் மற்றும் ப்ராட்மேன் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியாவிற்காக இரண்டாவது விக்கெட்டிற்கு 451 ரன்கள் குவித்ததே இதுவரை ஆஷஸ் தொடரில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.


1882ம் ஆண்டு முதல் சுமார் 140 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மேற்கண்ட சாதனைகள் இன்றளவும் தகர்க்கப்படாமலே உள்ளது. இந்த வரலாறுகளில் ஏதேனும் ஒரு சாதனையையாவது நாளை தொடங்க உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தகர்க்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண