சென்னையைச் சேர்ந்தவர் நடிகர் மகா காந்தி. இவர் சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
“கடந்த மாதம் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, நடிகர் விஜய்சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது அதனை ஏற்க மறுத்து, விஜய்சேதுபதி பொதுவெளியில் தம்மை இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய தம் மீது விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் காதில் அறைந்ததார். இதனால், தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மை சம்பவங்கள் இவ்வாறு இருக்க, கடந்த மாதம் 3-ந் தேதி விஜய்சேதுபதி தாக்கப்பட்டதாக அவர் தரப்பில் அவதூறு பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்டச் சென்ற என்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பான செய்தியாக மாற்றியதற்காக. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூர் சென்றார். அங்கு விமான நிலையத்தில் நடந்து சென்ற விஜய் சேதுபதி மீது திடீரென்று ஒரு நபர் எட்டி உதைத்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பின்னர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
விமானத்தில் நடிகர் மகாகாந்திக்கும், விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதத்தின்போது மகாகாந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்