அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக இன்று காலை மாநாட்டு விழாவின் மலர் குழு கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பான தலைமை கழக அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ளதையொட்டி, மாநாட்டில் மலர் வெளியிடுவது சம்பந்தமாக, தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை (27.07.2023 வியாழக் கிழமை), மாநாட்டு விழா மலர் குழுவின் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், மாநாட்டு விழா மலர் குழுவினர்களான, கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம், கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் V. சரோஜா, கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர். இன்பதுரை, ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர் கூ. ரவி ஆகியோர் கலந்துகொண்டு, மாநாட்டில் வெளியிட இருக்கும் மலர் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்கள்” என குறிப்பிடப்பட்டது.


ஜூலை 5-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது, இதற்கான பணிகளை தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் அதிமுகவும் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட தொடங்கியுள்ளது.


அடுத்த வாரம் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மதுரை மாநாடு மட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும், ஓபிஎஸ் தரப்பில் நடத்தப்படும் மாநாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Niger Military Coup: நைஜர் நாட்டில் வெடித்த திடீர் கலகம்.. அதிபர் சிறைபிடிப்பு.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்..


IIT Suicide Cases: ஐஐடிகளில் தொடரும் துயரங்கள்: 5 ஆண்டுகளில் 39 மாணவர்கள் தற்கொலை..வெளியான அதிர்ச்சித் தகவல்!


Hogenakkal: கர்நாடகாவில் கொட்டும் கனமழை... ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக உயர்வு..!