MS Swaminathan: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு - பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதனின் மறைவிற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவிற்குஆழ்ந்த இரங்கல். நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது மற்றும் நமது தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. விவசாயத்தில் அவர் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளுக்கு அப்பால், டாக்டர் சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது. டாக்டர் சுவாமிநாதனுடனான எனது உரையாடல்களை நான் எப்போதும் போற்றி மகிழ்வேன். இந்தியா முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்மாதிரியாக இருந்தது. அவரது வாழ்க்கையும் பணியும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், பின் தொடர்பாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


Rain Alert : தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?




  • தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


    28.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள்,  நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.




       


        29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான             மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள் மற்றும்  நீலகிரி  மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய             வாய்ப்புள்ளது. மேலும் படிக்க


14 வயதில் 100 உலக சாதனைகள்..! ஒரே நாளில் 30 உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்திய நெல்லை மாணவி பிரிஷா..!



  • நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியாவின்  14 வயது மகள் பிரிஷா. இவர் 9- ம் வகுப்பு படித்து வருகிறார். 


பிரிஷா, கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது நூறாவது உலக சாதனையை  தற்போது நிறைவு செய்துள்ளார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த நிகழ்வில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக்க வேகமாக செய்வது, கண்களைக் கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும் கண்களைக் கட்டிக் கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண்களை கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார். இவரின் உலக சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும் படிக்க


Governor Ravi: ”சனாதனம் தான் எல்லாமே, யாராலும் அழிக்க முடியாது, முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” - ஆளுநர் ரவி சவால்



  • சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர். ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை. தற்போது சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்கான கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் சனாதனத்தின் விழுமியங்களைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சனாதனம் அழியாதது” என ஆளுநர் ரவி பேசியுள்ளார்.


ADMK-BJP: "அண்ணாமலையை நீக்க சொன்னோமா? கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்" - கே.பி.முனுசாமி பரபர பேட்டி!



  • ஒரு கட்சியின் மாநில தலைவரை  நாங்கள் மாற்ற வேண்டும் என்று கூறுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக நினைக்கிறேன். எனவே, அண்ணாமலையை மாற்ற கோரிக்கையையும் வைக்கவில்லை. அந்த கேள்விக்கும  இடமில்லை. பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது சிறுபிள்ளைத்தனமானது.  அண்ணாமலையை மாற்றக் கோருவது எங்கள் எண்ணம் இல்லை. நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்.  முதிர்ந்த ஒரு அரசியல் கட்சி எந்த நிலையிலும் ஒரு கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என கேட்காது” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

  • உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததால் தொண்டர்கள் கோபமடைந்தனர். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை மாவட்ட செயலாளர்கள் எடுத்துரைத்தனர். பாஜக உடனான கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றார். மேலும் படிக்க