ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் மகாவீர் ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் அந்த ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டில்  இறைச்சி கடைகள் மூடப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளி கொண்டாடப்படும் நாளான நவம்பர் 4-ந் தேதிதான் மகாவீர் ஜெயந்தியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால், நடப்பாண்டில் தீபாவளி தினத்தில் இறைச்சி கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.




பின்னர், இறைச்சி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பினரும் தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சற்றுமுன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது,


Tamilnadu day: ஒரு பக்கம் ஆதரவு.. மறுபக்கம் எதிர்ப்பு.. நடுவே தமிழ்நாடு நாள்.. என்ன சொல்கிறது வரலாறு!


“ இந்த ஆண்டு வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதேநாளில் மகாவீர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நாளன்று இறைச்சி கடைகள் மூடப்படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.




அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களைச் சுற்றியுள்ள இறைச்சி கடைகள் மூடப்படும்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch Video: ஸ்தம்பித்தது பெங்களூரு... புனீத் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கர்நாடகம்!


தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அனைவரது இல்லங்களிலும் பெரும்பாலும் இறைச்சி வகை உணவுகளே சமைக்கப்படுவது பழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் அசைவ உணவுகள் செய்யப்பட்டு, புத்தாடைகள் அணிந்து அதை படையலிட்டு வழிபடுவதை மரபாகவும் கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


மறந்தும் இந்த வெடியெல்லாம் வெடிக்காதீங்க.. குற்றவியல் நடவடிக்கை பாயும்.. அரசு எச்சரிக்கை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண