மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார் உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் படையெடுத்து வருவதால் பெங்களூரு நகரமே ஸ்தம்பித்துள்ளது/


கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த கன்னட திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்தியா திரையுலகுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


இந்த நிலையில், பெங்களூரு கண்டிர்வா மைதனாத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு விடிய விடிய ரசிகர்கள் நேரில் அஞ்சலி வருகின்றனர். நேற்று இரவு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தததால், போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். மைதானத்தின் வெளியே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். அங்குள்ள ரசிகர்கள் புனீத்தின் மரணத்தை நம்பமுடியாமல் கண்ணீர் வடித்தனர். மாநிலங்களில் இருந்து ரசிகர்கள் படையெடுத்து வருவதால் பெங்களூர் முழுவதும் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், நடிகர்கள் யாஷ், தர்ஷன், நடிகைகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று தென்னிந்தியாவில் இருந்து பிரபலங்கள் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனீத்தின் மகள் அமெரிக்காவில் இன்று இரவு அமெரிக்காவில் இருந்து வருகிறார். அவர் வந்த பிறகு நாளை அரசு மரியாதையுடன் அவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது. புனீத்தின் தந்தை ராஜ்குமாரின் உடல் அருகிலேயே, இவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.


 










கன்னடத் திரையுலகின் மூத்த நடிகர்கள் ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனான புனீத் ராஜ்குமார் தனது திரையுலகப் பயணத்தைக் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கியவர். 1985ஆம் ஆண்டு, கன்னட மொழியில் வெளியான `பெட்டடா ஹூவு’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் புனீத் ராஜ்குமார். யுவரத்னா, ராஜகுமாரா, அஞ்சனி புத்திரா, பவர், அப்பு முதலான 29 திரைப்படங்களில் நடித்தவர் புனீத் ராஜ்குமார். தனது ரசிகர்களால் அன்போடு `அப்பு’ என்று அழைக்கப்பட்டவர். அவரது எதிர்பாரா மரணம் அவரது பல கோடி ரசிகர்களின் இதயங்களில் கனத்த வலியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் இந்தியத் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகவும் கருதப்படுகிறது.