கடந்த 2021ஆம் ஆண்டு அப்பு நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் 423 கோடி ரூபாய்க்கு வாங்கியது. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் வழக்கு தொடர்ப்பட்டது. அதை தேசிய நிறுவன தீர்ப்பாயம் தள்ளுப்படி செய்தது.
இதைத் தொடர்ந்து எம்ஜிஎம் நிறுவனம் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்கி அதை மருத்துவமனையாக மாற்ற உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பு நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்வதாக தேசிய நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.