மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு சிறப்பானது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் படிநிலையாக இருப்பதுடன், சமூக நீதிக்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

Continues below advertisement

"என்னுடைய சாதி பத்தி தெரிஞ்சிகிட்டேன்"

இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களது விருப்பங்களையும் பூர்த்தி செய்வதாக அமையும் என்று அவர் தெரிவித்தார். தொடக்க காலத்தில், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் இருந்தது.

இறுதியாக, சாதிவாரி கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது என்றும், அவ்வாறு பல முறை நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் எனது சாதி குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்று அவர் தெரிவித்தார். எனவே, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Continues below advertisement

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய புள்ளியியல் பணி பயிற்சி முடித்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கான பணியில் சேர உள்ள அதிகாரிகளிடையே உரையாற்றிய தன்கர், “பிரிவினையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிந்தனையுடன் சேகரிக்கப்பட்ட சாதி குறித்த தரவுகள் ஒருங்கிணைப்புக்கான கருவியாக இருக்கும் என்றார்.

என்ன கூறினார் துணை ஜனாதிபதி?

இந்த வழிமுறை சமத்துவத்திற்கான சுருக்கமான அரசியலமைப்பு உறுதிமொழிகளை அளவிடக்கூடிய, பொறுப்புணர்வுள்ள கொள்கை விளைவுகளாக மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “வலுவான புள்ளிவிவரங்கள் எதுவுமின்றி பயனுள்ள கொள்கைக்கான திட்டமிடல் செயலானது இருளில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது போன்றது என்று புள்ளிவிவரத் தரவுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். 

நாட்டின் தேசிய தரவுத்தளத்தில் உள்ள ஒவ்வொரு தரவும் ஒவ்வொரு குடிமகன் தொடர்பான தகவல்களைப் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கானத் திட்டங்களை வகுக்கும் பொது தரவுகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சேவை செய்வது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்  வளமான அனுபவங்களை அளித்திடும் என்றார். புள்ளிவிபரங்கள் ஒரு கானல் நீர் போன்றது என்றும், ஏனெனில், அவை உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்காது " என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் விருப்பங்கள் ஆதார அடிப்படையிலான திட்டமிடலில் உறுதியாக வேரூன்றியுள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் மீண்டும் உறுதிபடக் கூறினார் . "ஒரு தேசமாக, நம் அனைவருக்கும் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்பது வெறும் கனவு அல்ல என்றும், அது நம் அனைவரின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.