நடிகர் வடிவேலுவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


இதற்கிடையே ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், “ வடிவேலு, தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் ஆகியோருக்கு தொற்று உறுதியானதால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வடிவேலும் எஸ் ஜீன் டிராப் உறுதியானது. தற்போது அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.




இயக்குநர் சுராஜுக்கு நெகட்டிவ் என்று வந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு அவரை நலம் விசாரித்தபோது தனக்கு சளி இருப்பதாக தெரிவித்தார். எனவே அவரை பரிசோதிக்குமாறு மருத்துவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். மற்றபடி மூன்று பேரும் நலமாகவே இருக்கிறார்கள்


ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 34 பேரில் 12 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்த 39 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கான முடிவு ஐந்து நாள்களில் வெளியாகும்.




ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி  Non - Risk நாடுகளில் இருந்து வருவோருக்கும் ஏழு நாள்கள் தனிமை கட்டாயம். non-Risk நாடுகளிலிருந்து வருவோருக்கான பரிசோதனை விகிதம் இரண்டு சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


கூட்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம். அதிகம் பேர் கூடும் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளை விடுதி உரிமையாளரும், மக்களும் தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தை புதுச்சேரிக்கு சென்று கொண்டாடுவதை யாரும் செய்ய வேண்டாம்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் குற்றநடவடிக்கை: என்ன சொல்கிறது புதிய விதி? முழு விபரம் இதோ!


‛சினிமாவில் கேப்டன் நடிக்க மாட்டார்... நடிப்பதாக இருந்தால் தலைமைக்குழு அறிவிக்கும்’ -பிரேமலதா பேட்டி!


‛கொரோனாவும் பயம் எனக்கு...’ 8 தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்: 9வது ஊசிக்கு முயன்ற போது பிடிபட்டார்!