உலகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரசின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் உலக நாடுகளில் தீவிரமாக செலுத்தப்பட்ஐடு வருகிறது. தற்போது, ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.


இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.




இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெலகாவி டவுண் சார்லிராய் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா பயத்தில் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் அந்த பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அதற்கான ஆவணங்களை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.


அவரது ஆவணங்களில் பல்வேறு சந்தேகங்கள் இருந்ததால் அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவரது பதில் முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது. இதையடுத்து, அந்த நபர் போலியாக ஆவணங்கள் அளித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முயன்றதாக போலீசில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.




இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீசாரும், சுகாதாரத்துறையினரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் கூறிய தகவல் அமைந்தது. வைரஸ் அச்சுறுத்தலால் அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை 8 முறை செலுத்தியது தெரியவந்தது. தடுப்பூசியை தவறாக பயன்படுத்தியதற்காக அவரை போலீசார் கைது செய்தனர்.


கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு தடுப்பூசி செலுத்தக்கூட பொதுமக்கள் பலரும் பயந்து வரும் சூழலில், பெங்களூர் நபர் 8 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும்  அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : கரீனா கபூரின் குழந்தைகள் பெயர் என்ன? தேர்வுத்தாளில் விநோத கேள்வி!




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண