தமிழ்நாட்டில் சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்றும், தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்றும் மாறி, மாறி கூறி வருவதால் மக்கள் மத்தியில் தமிழ்ப்புத்தாண்டு குறித்து குழப்பமான நிலையே நீடித்து வருகிறது. இந்த நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டு, தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க, கிராமங்கள்தோறம் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து நடைபெற்ற விளையாட்டுத்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது” என்று பதிவிட்டுள்ளார். தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று அமைச்சர் குறிப்பிட்டிருப்பது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக தமிழ்நாடு அரசு அச்சிடப்பட்டுள்ள பைகளில் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
கடந்த 2008ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு தை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட சட்டம் இயற்றியது. பின்னர், 2011ம் ஆண்டு தி.மு.க. அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து, வழக்கம்போல சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படும என்று ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. இந்த சூழ்நிலையில், மீண்டும் தமிழ் புத்தாண்டு சர்ச்சை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்