கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பதவி ஏற்றுக்கொண்டார்.


 




 


கரூர் மாவட்டத்தில் 32 வது காவல் கண்காணிப்பாளராக முனைவர் கே. பிரபாகரன் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சட்டம் பயின்று வரலாற்று துறை முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் காவல் துறை துணைக்கண்காணிப்பாளராக தேர்ச்சி பெற்று கோவை ,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்கோட்டங்கள் மற்றும் சென்னை ஆவின் விஜிலென்ஸ் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து, அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அதிரடிப்படையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.


 




 


இவர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகரில் நவீன கட்டுப்பாட்டு அறை, செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் மாவட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். மேலும், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஒரு ஆண்டு கால பணியாற்றி தற்போது பணி மாறுதல் காரணமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தனது பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.


 


 




 


கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரபாகர் தெரிவிக்கையில், பொதுமக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் மற்றும் சூதாட்டம் தொடர்பான புகாரியில் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.