தஞ்சாவூர்: இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. என்ன ரெடியாயிட்டீங்களா?

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி அசிஸ்டன்ட் இன்ஜினியர், அசிஸ்டன்ட் அக்கௌன்ட் ஆபீஸர், அசிஸ்டன்ட் ப்ரோக்ராமர், கணக்காளர் உள்ளிட்ட மொத்தம் சுமார் 418 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பணிகளுக்கு அதிகபட்சம் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்றாலும், சில பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கேற்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிகளுக்கான தேர்வு வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலும் தகவல்களை பெற விரும்பினால் apply.tnpscexams.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற ஜூன் 25. இன்னமும் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிடுச்சுங்க. ஏன்னா? இன்னும் ஒரே வாரம்தான் இருக்கு.

மின்சார வாரிய பணிகள் என்பது மின்சாரம் தொடர்பான அனைத்து வேலைகளையும் உள்ளடக்கியது. இதில் மின் உற்பத்தி, பகிர்மானம், பராமரிப்பு, புதிய இணைப்புகள் வழங்குதல், பழுது நீக்குதல் மற்றும் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அடங்கும்.

அனல்மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், சூரிய மின்னாற்றல் நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தல். உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் மூலம் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு விநியோகித்தல். புதிய வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல்.

மின்சார விநியோகத்தில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்து, தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்தல். மின் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் மின்சார நிலையங்களை பராமரித்தல். மின்சார மீட்டர்களை கணக்கெடுத்து, மின் பயன்பாட்டிற்கான கட்டணங்களை வசூலித்தல் என்று ஏராளமான பணிகள் உள்ளடக்கியது. இந்த மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும். பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

படித்த இளைஞர்களுக்கு மின்வாரியத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது மிகவும் விருப்பமான ஒன்றாகும். பல்வேறு பணியிடங்கள் இருக்கின்றன. இதில் தங்களின் தகுதி, படிப்புக்கேற்ற வேலைகளுக்கு அறிவிப்பு வெளியாகும் போது மிஸ் செய்யாமல் விண்ணப்பித்து பயன் பெறணும்.

மேற்குறிப்பிட்ட பணிகள் மட்டுமில்லைங்க... சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துவதை தடுத்தல் போன்ற பணிகளையும் மின்வாரியம் மேற் கொள்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) 1957-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழ்நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது. சிறந்த பணி, நல்ல சம்பளம் என்ற மின்வாரிய வேலைகளை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். இதில் வேலையில் சேர வேண்டும் என்ற கனவுடன், துடிப்புடன் உள்ளவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். தகுதியான படிப்பும், உங்களுக்கான வயதும் மேற்கண்ட பணிகளுக்கு இருந்தால் உடன் தாமதமின்றி உடன் விண்ணப்பியுங்கள். இனி உங்கள் முயற்சிகள் உடனடியாக இருக்கட்டும். கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாமே.

 

மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிக்கையை முழுமையாகக் காண https://tnpsc.gov.in/Document/english/CTS%20-%20Diploma,%202025%20Final%20English_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.