தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆபீஸ் பாய்; மேனேஜர்; அசிஸ்டண்ட் டைரக்டர்.... - இயக்குநர் சேரன் சினிமாவுக்கு வந்த கதை...!
அடுத்த 5 நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ. 2 லட்சம் கடனுக்கு 10 லட்சம் கேட்டு மிரட்டல்... கந்துவட்டி கொடுமையால் ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை!
தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. கேரளா - கர்நாடகா கடலோரப் பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளந்திரியில் 7 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. மேட்டுப்பட்டியில் 3 செ.மீ., உதகை நீலகிரியில் உள்ள சாத்தியாரில் 2 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்