கொரோனா அச்சுறுத்தல், ஒமிக்ரானின் ஆரம்பம் என 2021ஆம் ஆண்டு ஒருவழியாக முடிவடைந்திருக்கிறது. புத்தாண்டான 2022ஆம் ஆண்டு பிறக்க இருப்பதை உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.


அதன்படி கிழக்கு பசுபிக் நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகளில் இந்திய நேரப்படி 2021 டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அதனையடுத்து நியூசிலாந்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.


இந்நிலையில், இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்திருக்கிறது. பிறந்திருக்கும் புதிய ஆண்டை மக்கள் கோலாகலமாகவும், நம்பிக்கையாகவும் வரவேற்றுள்ளனர். பிறந்திருக்கும் வருடம் கடந்த ஆண்டுகளை போல் மக்களுக்கு எந்த துன்பத்தையும் கொடுக்கக்கூடாது எனவும் கோயில்களில் மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். 


பிறந்திருக்கும் ஆண்டு மக்களின் நம்பிக்கையை பொய்க்கவிடாமல் காக்க வேண்டுமென்பதே உலக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைவருக்கும் Abpnadu-இன் புத்தாண்டு வாழ்த்துகள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Timeline of New Year Welcoming | புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடும், கடைசி நாடும் எது தெரியுமா? ஒரு லிஸ்ட்..


New Year 2022 New Zealand | நியூசிலாந்தில் பிறந்தது 2022.. வண்ணமயமான கொண்டாட்டமும், கோலாகலமும்..