கொரோனா அச்சுறுத்தல், ஒமிக்ரானின் ஆரம்பம் என 2021ஆம் ஆண்டு ஒருவழியாக முடிவடைந்து புத்தாண்டு பிறக்க இருப்பதை உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டானது பிறக்க இருக்கிறது.


இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடு முதல் கடைசி நாடுவரையிலான பட்டியல் பின்வருமாறு:


சிறிய பசிபிக் தீவு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகியவை புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடுகளாகும். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு அந்த நாடுகளில் புத்தாண்டு பிறக்கிறது.


இந்த நாடுகளுக்கு பிறகு நியூசிலாந்து நாட்டில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.


அதேபோல் இந்திய நேரப்படி, 


மாலை 5.30 மணிக்கு ரஷ்யா


6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிடின், கேன்பெர்ரா, ஹோனியரா


மாலை 7 மணிக்கு அடிலெய்டு, ப்ரோக்கன் ஹில், செடுனா


இரவு 7.30 மணிக்கு பிரிஸ்பேன், போர் மோரெஸ்பி, ஹஹாட்னா


இரவு 8 மணிக்கு டார்வின், அலைஸ் ஸ்ப்ரிங்ஸ், டெனண்ட் க்ரீக்


இரவு 8.30 மணிக்கு, ஜப்பான், தென் கொரியா, சீயோல்,  Pyongyang, Dili, Ngerulmud


இரவு 9.30 மணிக்கு சீனா, பிலிப்பைன்ஸ்


இரவு 10.30 மணிக்கு இந்தோனேசியா, தாய்லாந்து


இரவு 11 மணிக்கு மியான்மர்


இரவு 11.30 மணிக்கு வங்காளதேசம்


இரவு 11.45 மணிக்கு நேபாளின் காத்மண்டு, போக்ஹரா, பிராட்நகர்


நள்ளிரவு 12.00 (ஜனவரி 1) மணிக்கு இந்தியா, இலங்கை


நள்ளிரவு 12.30 மணிக்கு பாகிஸ்தான்


நள்ளிரவு 1 மணிக்கு ஆஃப்கானிஸ்தான்; அஸெர்பைஜன், ஈரான், மாஸ்கோ, க்ரீஸ், ஜெர்மனி


ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு இங்கிலாந்து, பிரேசில் நாடுகளில் புத்தாண்டு பிறக்கிறது.


அதேபோல், இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரைக்குள் கனடாவிலும், அமெரிக்காவிலும் புத்தாண்டு பிறக்கிறது.


இறுதியாக இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவில் கடைசியாக புத்தாண்டு பிறக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண