சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:  "பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு ஆளுநர் பேச வேண்டும். நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்துவது சரியா? பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் நடத்துவது ஏன்? ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலையே கூறிவிட்டார். அரசியல்வாதிகளை போல ஆளுநர் அறிக்கை விடுவது சரியா? ஒவ்வொரு துறையிலும் ஆளுநர் அரசியல் செய்து வருகிறார். நிறை குறை இருக்கலாம். அதை அமைச்சர்களிடமோ அல்லது துறை அதிகாரிகளிடமும் சொல்ல வேண்டும். அதை செய்யாமல் அறிக்கை விடுகிறார் ஆளுநர்.எல்லாத் துறைகளிலும் தாம் தான்  எல்லாம் என ஆளுநர் நினைக்கிறார்”என்றார்.


முன்னதாக ஜூலை 4-ஆம் தேதி சென்னை பல்கலைக் கழக நிர்வாக அமைப்புகளுடன் ஆளுநர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகக் குழுக்களின் சார்பில், பல்கலைக் கழகத்தில் நிரந்தர பதிவாளர் மற்றும் நிரந்தர தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் துறை வாரியாக நிரப்பப்படாமல் உள்ள பேராசியர்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த கூட்டத்தில், நிர்வாக கூட்டங்கள்  அதாவது சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகத்துக்கு பதிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பின்னர், ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள, அறிக்கையில் : “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் நிரப்பப்படாமல் உள்ள நிரந்தர துணை வேந்தர்களையும், நிரந்தர பதிவாளர்களையும், நிரந்த தேர்வுக்கட்டுப்பாட்டாளர்களையும் நியமிக்க வேண்டும், பணியிடங்கள் காலியா இருப்பதால் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது, எனவே விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


மேலும், நிரப்பப்படாமல் உள்ள பேராசிரியர்கள் இடங்களையும் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான தேவை உள்ளது அவற்றையும் நிரப்ப வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  


மேலும் படிக்க


Chennai-Jaffna Flights Service: ‘இனி 4 நாட்கள் இல்லை; தினமும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பறக்கலாம்! எப்போது தொடங்குகிறது தெரியுமா?


Minister Ponmudi: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை; சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு