தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர்  மரணமடைந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியான பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.


அந்த வகையில், கோயம்பத்தூர் நேரு கல்வி குழுமத்தில் நடைபெற்ற புதிய மாணவர்களை கொண்டாடும்  நாளில் எடுக்கப்பட்ட வீடியோவை, தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மரணத்தைக்  கொண்டாடும் வீடியோவாக விஷமிகள் பரப்பி வருகின்றனர்.






இதில் ஒரு படி மேலே, மலையாள செய்தி ஊடகம் ஒன்று இதனை உண்மையெனக் கருதி (அல்லது பொய்யென்று தெரிந்தும்) செய்தியாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகத்தின் பொறுப்பற்றத்தன்மை என குறிப்பிட்டு நேரு கல்வி குழுமம் வன்மையாகக் கண்டித்துள்ளது. 


இந்த பொய் வீடியோ தொடர்பாக விளக்கமளித்த கல்வி குழுமம், "குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கு ஒருநாள் முன்னதாக கல்லூரியில்  புதிய மாணவர்களை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இது. இந்த வீடியோ தற்போது தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனை பாதிக்கும் இத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வீடியோ தொடர்பான ஆதராங்களை கோயம்பத்தூர் மாநகர காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். மலையாள செய்தி ஊடகம் மீது ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.  


முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிந்திருக்கிறது. மேலும், ஹெலிகாப்டர் விபத்தைப் பற்றிக் குறிப்பிட்டு தமிழ்நாடு இன்னொரு காஷ்மீரா?  என்று பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸ் என்ற நபரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது.        






இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 வி-5 ஹெலிகாப்டரில் அதை இயக்கும் 4 படை வீரர்கள், 9 படைப்பிரிவை சேர்ந்த இதர வீரர்கள் ஆகியோருடன் பயணித்த முப்படை தலைமை தளபதி குன்னூர் அருகே இந்த கெடுவாய்ப்பான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் துணைவியார் மதுலிகா ராவத்தும் உயிரிழந்தார். அவர்களுடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்ததனர்.   க்ரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


மேலும் பார்க்க..



தொடர்புடைய செய்திகள்: 


Watch Video | ''தமிழகத்தின் உயர் அதிகாரிகள் கோபாலபுரத்து அடிமைகள்'' - வார்த்தைகளை வீசிய அண்ணாமலை! 


Annamalai Meets Governor : ”சட்டவிரோத வழக்கு..சமூக வலைதள குரல்கள்..”: ஆளுநரிடம் மனு கொடுத்த அண்ணாமலை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண